போர்க்குற்றம் / இலங்கையர் ஒருவர் பிரித்தானியாவில் கைது

4 years ago
Sri Lanka
(100 views)
aivarree.com

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மறைந்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமல்ராஜன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக, பிரித்தானியாவில் ஒருவர் போர்க்குற்றம் புரிந்தமை அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய காவல்துறையின் யுத்தக்குற்றப் பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பிரித்தான காவல்துறை இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் புரிந்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதுகுறித்து நிமல்ராஜனின் வீட்டாருக்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும், இது ஒரு முக்கியமான நிகழ்வாகும் எனவும் பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் சாட்சி வழங்குமாறும் பிரித்தானிய காவல்துறை கோரியுள்ளது.