Aivarree

பொலிஸ் அலுவலரை தாக்கிவிட்டு விஷமருந்திய நபர்

போக்குவரத்து பொலிஸ் அலுவலர் ஒருவர் இன்று காலை அம்பலாந்தோட்டை நகரில் வைத்து கோடரியால் தாக்கப்பட்டார்.

இதில் கழுத்தின் பின்பகுதியில் காயமுற்று ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த அலுவலரை தாக்கிய சந்தேக நபர் விஷம் அருந்தியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு எதிராக அம்பலாந்தோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவர் அபராத தொகை விதித்த பின்னணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் அபராதம் விதித்தவரை விட்டுவிட்டு, வேறொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Exit mobile version