பேராயர், அரசாங்கம் மீது கடும் அதிருப்தியில்

4 years ago
Sri Lanka
(82 views)
aivarree.com

அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியில் இருப்பதாக கர்தினால் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பேராயர் இல்லத்தில் செவ்வாய் அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசு ஏப்ரல்-21 தாக்குதலுக்கு நியாயம் வழங்காமல் அது சம்பந்தமாக குரல் எழுப்புகின்றவர்களை கட்டுப்படுத்த முயற்சி எடுப்பதாக குற்றம் சுமத்தினார்.

தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பந்தமான குற்றவாளிகளை தண்டித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் சர்வதேசத்தை கத்தோலிக்கத் திருச்சபையினர் நாடவேண்டி வரும் எனவும் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் நீதிக்காக குரல் எழுப்புகின்றவர்களை நசுக்க முயற்சிப்பது ஜனநாயகத்தில் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.