புற்றுநோயின் தாக்கம்/ நாளாந்தம் 40 பேர் மரணம்

5 years ago
tamilnewsline.com

நாட்டில் புற்றுநோயினால் உயிரிழப்பவர்கள் தொடர்பான விபரங்களை தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு நேற்று அறிவித்தது.

நாட்டில் நாளாந்தம் 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாக அந்த பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் புற்றுநோயால் 31 ஆயிரத்து 848 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக புற்றுநோய் தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகின்றது.