Aivarree

புதிய அமெரிக்க தூதுவர் சத்திய பிரமாணம் / இந்த வாரம் இலங்கை வருவார்

அமெரிக்காவின் புதிய இலங்கைத் தூதுவராக ஜூலி சுங் வியாழன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அவர் இலங்கைக்கான தூதுவராக அலைனா பி. டெப்லிட்ஸுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுங், மேற்கு பிராந்திய விவகாரங்களுக்கான பணியகத்தில் உதவி செயலாளராக கடமையாற்றினார்.

துணை உதவிச் செயலாளராகவும், ஜப்பான், வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, கொலம்பியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் பணியாற்றினார்.

இந்த வாரம் அவர் இலங்கைக்கு வந்து தமது கடமைகளை பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version