பிரதமர் மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு எதிராகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்னாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இந்த போராட்டத்தை நடத்தினார்கள்.
போர்க்குற்றச்சாட்டுகளை கொண்டுள்ள ராஜக்ஷவினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறும், காணாமல் போனோர் அலுவலகத்தை ஏற்கப்போவதில்லை என்றும் அவர்கள் கோசம் எழுப்பினார்கள்.
