அண்மையில் அமைச்சுப் பதவி நீக்கம் செய்யப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பாராளுமன்றில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வின் போது விமல் வீரவன்சவும், 10ம் திகதி உதய கம்மன்பிலவும் இந்த விசேட அறிவிப்பை வெளியிடவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாங்கள் பதவி நீக்கப்பட்டதன் பின்னணி குறித்து அவர்கள் இருவரும் முக்கிய தகவல்களை வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இது குறித்து அவர்கள் ஊடக சந்திப்பை நடத்தி இருந்தனர்.
இதில் வெளியிடப்படாத பல தகவல்களைப் பகிரங்கப்படுத்த விமலும் கம்மன்பிலவும் எதிர்பார்த்திருப்பதாகக் கூறப்படுகிறது.
