தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போது, அவரை தகாத வார்த்தையால் தூற்றிய சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன, சாணக்கியனை அவதூறாகப் பேசினார்.
தமக்கு எதிராக இவ்வாறு தொடர்ச்சியான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், ஆளுங் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது சிரேஷ்ட உறுப்பினர்களைப் பின்பற்றி இவ்வாறு நடந்து கொள்வதாகவும் சாணக்கியன் தமது உரையின் போது குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக ‘முடிந்தால் நடவடிக்கை எடுங்கள்’ என்று சபைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினரிடம் கண்ணியமாகச் சாணக்கியன் கேட்டுக் கொண்டார்.
