Aivarree

பானுகவின் உடற்தகுதி குறித்து விசேட அவதானம்

சிறிலங்கா கிரிக்கெட்டின் (SLC) மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா, பானுக ராஜபக்சவின் உடற்தகுதி மற்றும் தோல் மடிப்பு அளவை தனிப்பட்ட முறையில் கண்காணித்து அவதானம் செலுத்தவுள்ளார்.

30 வயதான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பானுக, அதிகப்படியான தோல் மடிப்பு அளவைக் கொண்டிருப்பதால், இந்திய சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை.

அவரை இந்த தொடரில் உள்ளடக்க கோரி அண்மையில் சிறிலங்கா கிரிக்கட் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டமும் நடத்தப்பட்டது.

சர்வதேச விளையாட்டு வீரருக்கும் இருக்க வேண்டிய சாதாரண தரத்தின்படி அவர் தனது உடற்தகுதியைத் தக்கவைத்துக்கொள்வதை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக பேராசியர் அர்ஜுன தெரிவித்துள்ளார்.

Exit mobile version