எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை, ஹொட்டல்கள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் பெரும் செலவு ஏற்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளார்கள் கூறுகின்றனர்.
இதனால் வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலையில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் ஏற்கெனவே பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், மேலும் அதிகரித்தால் மக்கள் மத்தியில் அவற்றை விற்பனை செய்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் விலை அதிகரிப்பு குறித்து இப்போதைக்கு தீர்மானம் எடுக்கவில்லை என்றும் வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
