பாணுடன் பாராளுமன்றம் சென்ற MP

4 years ago
Sri Lanka
(149 views)
aivarree.com

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் கால் ராத்தல் பாணுடன் வந்ததால் பாராளுமன்றில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

சபைக்கு கொண்டு வரப்பட்ட பாணை காண்பித்து, “கால் ராத்தல் பாணை சாப்பிட்டு வாழ்ந்த மக்கள் அதன் விலை அதிகரிப்பால் பட்டினியால் இறக்க நேரிட்டதாக” குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் எரிவாயு, எரிபொருள், பால் மா போன்ற பொருட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலையால் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, நாட்டில் தோல்வியுற்ற நிர்வாகம் உருவாகியுள்ளதாகவும், பசில் ராஜபக்ஷ ஏழு மூளை கொண்ட தலைவர் அல்ல, மூளையற்ற தலைவர் எனவும் நளின் தெரிவித்தார்.