Aivarree

பாணின் விலை 100 ரூபாவா? 

எதிர்காலத்தில் ஒரு ராத்தல் பாணின் விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்படக்கூடும் என்று வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கொழும்பில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், எரிவாயு பற்றாக்குறை, எரிபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். 

எரிவாயு பற்றாக்குறையின் காரணமாக தற்போது 1000க்கும் அதிகமான சிற்றுண்டிச் சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த நிலையில் எதிர்காலத்தில் 100 ரூபாவுக்கு குறைவாகப் பாண் விற்பனை செய்யப்படுவதாக இருந்தால், அது நியம நிறையைக் கொண்டதாக இருக்காது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

Exit mobile version