Aivarree

பாட புத்தகங்களை அச்சிடுவதில் சிக்கல் நிலை

உரிய நேரத்தில் அச்சு தாள்கள் கிடைக்காவிட்டால் பாட புத்தகங்களை அச்சிடுவதில் இடையூறு ஏற்படும் என அரச அச்சகப் பணிப்பாளர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கான பாட புத்தகங்கள் அச்சிடும் பணி அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

அச்சடிக்கும் காகிதத்தின் விலை சுமார் 28 சதவீதம் உயர்ந்துள்ளதால் பாடநூல் அச்சடிப்பதற்கான பிரத்தியேக அச்சுத் தாள்களைக் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அரசின் அடிப்படை ஆவணங்களை அச்சடிக்கும் பணி வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.

ஆனால் காவல்துறையினரின் அபராத சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை அச்சிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version