வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும்.
மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சப்ரகமுவ மற்றும் மேல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
