மட்டக்களப்பில், கொக்கட்டிச்சோலை – அரசடிதீவு பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு சென்று திரும்பிய 21 வயதுடைய பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை (22) கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்றில் பிரவேசித்த சிலர் குறித்தப் பெண் கடத்தப்பட்சதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தலில் ஆசிரியர் ஒருவரும் ஈடுபடுட்டிருந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியருக்கும் கடத்தப்பட்ட பெண்ணுக்கும் இடையிலான காதல் விவகாரமே கடத்தலுக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
