Aivarree

பயன்படுத்தப்பட முடியாத படகுகளே ஏலமிடப்பட்டன – டக்ளஸ் தகவல்

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்த போது கைப்பற்றப்பட்ட படகுகள் யாழ்ப்பாணத்தில் ஏலத்தில் விடப்பட்டன.

சுமார் 140 படகுகள் ஏலத்தில் விடப்பட்டு 5,600,000 ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டது.

எனினும் மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட முடியாத படகுகளே இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா இந்திய மீனவர்களிடம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள இந்தியத் துணை உயர்ஸ்தானிகரகத்தின் ஏற்பாட்டில் இந்திய மீனவர் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற தொலை காணொளி வாயிலான கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறினார்.

தமிழகத்திலிருந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் அமைச்சர் டக்ளஸ், தமிழக மீனவர்களுக்கு எடுத்துக் கூறினார்.


அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவின் ஊடக அறிக்கை

Exit mobile version