பயங்கரவாத தடை சட்டம் – ஜனாதிபதி காவல்துறைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

4 years ago
Sri Lanka
(104 views)
aivarree.com

பயங்கரவாத தடை சட்டத்தை முறைக்கேடாக பயன்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, காவல்துறையினரை அறிவுறுத்தியுள்ளார்.


வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


காவல்துறையினர் சந்தேகநபர்களை இலகுவாக கைது செய்வதற்காக பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்துகின்றனர்.


இவ்வாறு இந்த சட்டத்தை குறுக்குவழியாக பயன்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


மேலும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைவயர்கள் என்று தெளிவாக கண்டறிந்ததன் பின்னரே இந்த சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருப்பதாக ஜீ.எல்.பீரிஷ் கூறுகிறார்.