tamilnewsline

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வலியுறுத்தல்

File Photo

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனச் சர்வதேச நீதிபதிகள் ஆயம் வலியுறுத்தியுள்ளது.


அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு கடந்த 27ம் திகதி வர்த்தமானி வெளியிட்டது.


இந்தத் திருத்தங்கள் போதுமானவை இல்லை.


மனித உரிமைகள் பேரவையின் மற்றுமொரு அமர்வுக்கு முன்னதாக, தமது தோல்வியுற்ற மனித உரிமைகள் பதிவிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாக இலங்கை அரசாங்கம் இதனை மேற்கொண்டுள்ளது என சர்வதேச நீதிபதிகள் ஆயத்தின் சட்ட மற்றும் கொள்கைப் பணிப்பாளர் இயன் சைடர்மன் (Ian Seiderman) தெரிவித்துள்ளார்.

Exit mobile version