நாட்டில் தற்போது பனடோல் பரசிட்டமோல் வகை மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
மக்கள் அச்சத்தில் பெருமளவில் அவற்றை கொள்வனவு செய்வதே இதற்கான காரணமாகும்.
எவ்வாறாயினும் நிலைமையை சமாளிக்க போதுமான கையிருப்பு நாட்டில் உள்ளது என சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில் நுட்ப பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி அய்வரி செய்திகளிடம் கூறினார்.
இறக்குமதிக்கு விடுக்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் இரண்டொரு வாரங்களில் மேலதிக இருப்பு நாட்டுக்கு கிடைக்கப்பெறும்.
ஏனைய மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது என்று அன்வர் ஹம்தானி கூறினார்.
