பசிலை சந்தித்த IMF உயரதிகாரி

5 years ago
tamilnewsline.com

இலங்கையின் நிதியமைச்சர் திங்களன்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நாடு அதன் வீழ்ச்சியடைந்த வெளிநாட்டு ஒதுக்கம், சரியும் நாணய பெறுமதி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் போன்றவற்றை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் சாங்யோங் ரீ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். அடிகல ஆகியோரை சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கையின் பொருளாதாரம் பற்றிய சமீபத்திய மதிப்பாய்வு விவரங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி ரீ செவ்வாய்க்கிழமை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷவை சந்திக்கவுள்ளார்.

ரொய்ட்டர்ஸ்