Aivarree

பசிலின் திட்டத்தை கிடப்பில் விட்ட மகிந்த 

சிறிலங்கா பொதுஜன பெரமுன தனித்து ஆட்சியமைக்கும் திட்டத்தை பசில் ராஜபக்ஷ பரிந்துரைத்து, அதற்கு ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்திருந்தார்.


ஆனால் அந்த திட்டத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கிடப்பில் வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்போதைய சூழ்நிலையில் அரசியல் ரீதியான குழப்பங்களை நாட்டில் ஏற்படுத்தக்கூடாது என்ற அடிப்படையில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.


விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து விலக்கப்பட்டதை அடுத்து, அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் 11 கட்சிகள் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்த பின்னணியிலேயே சிறிலங்கா பொதுஜன பெரமுன தனித்து ஆட்சியமைக்கும் தீர்மானத்தை எடுத்திருந்தது. 

Exit mobile version