பங்குனியில் கலைகிறதா பாராளுமன்றம்? / அமைச்சரின் பதில்

4 years ago
Sri Lanka
(68 views)
aivarree.com

எதிர்வரும் மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படவிருப்பதாக சில அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இது சம்பந்தமாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் கேள்வி எழுப்பப்பட்டது .

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் இது முற்றிலும் தவறான செய்தி என குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தைக் கலைக்க அல்லது அதன் அதிகார காலத்தை நீடிக்க இதுவரைக்கும் எந்தவிதமான கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.