Aivarree

பங்குச் சந்தை மீண்டும் சரிவில்

கொழும்பு பங்குச்சந்தை மீளெழ முயற்சித்த போதும், செவ்வாய்க்கிழமை மீண்டும் அது வீழ்ச்சியை எதிர்கொண்டது.

ஆசியா செக்யூரிட்டீஸ் தகவல்படி, தொடர்ந்து மூன்று நாட்கள் வளர்ச்சிப் போக்கில் இருந்த பங்குச் சந்தை முக்கிய பங்குகளின் விலை சரிவுகளால் நேற்று குறியீடுகள் சரிந்தன.

EXPO (-3.5%), BIL (-3.4%), RCL (-3.2%) மற்றும் SPEN (-3.4%) ஆகியவற்றின் விலை சரிவு காரணமாக ASPI 106 புள்ளிகள் (-0.9%) இழப்புடன் முடிந்தது.

ASPI உடன் ஒப்பிடுகையில், CLC (+19.3%), JKH (+1.9%), COMB (+1.4%) ஆகியவற்றின் விலை அதிகரிப்பின் காரணமாக, S&P SL20 சுட்டெண் 18 புள்ளிகள் (-0.4%) குறைந்த இழப்புடன் நிறைவடைந்தது.

Exit mobile version