tamilnewsline

நுவரெலியா செல்லும் சுமந்திரன், சாணக்கியன்

பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக இரத்து செய்யக் கோரி கையெழுத்துதிரட்டும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த நாட்களில் கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் இந்தநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதில் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம், மனோகணேசன் போன்றபாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நடவடிக்கை எதிர்வரும் 20ம் திகதி நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் நகரில் மேற்கொள்ளப்பட விருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அய்வரி செய்திகளுக்குத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நுவரெலியாநகரில் இடம்பெறவுள்ளது.

உடனடி செய்திகளுக்கு, வட்சப் குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/DzIgQk7SDjJJVFUqb6BU8w

Exit mobile version