Aivarree

நாடு நெருக்கடியில் | நாமல் குதூகலத்தில் | VIDEO

நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச மாலைதீவில் குதூகலத்தில் ஈடுபட்டுள்ளதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

மாலைதீவில் விளையாட்டு நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அங்கு நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு இருந்தார்.

இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

எனினும் தாம் “அரசாங்க நிதியில் இங்கு வரவில்லை என்றும் இவ்வாறான விஜயங்களை மேற்கொள்வதன் ஊடாக சுற்றுலாத் துறை உள்ளிட்ட அபிவிருத்திக்கு முக்கிய பங்கினை பெறலாம் என்றும் நாமல் ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.

எவ்வாறாயினும் சமூக வலைத்தளங்களில் மக்கள் அவர் குறித்து மிகப்பெரிய விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

காணொளி கீழே…

https://youtube.com/shorts/0J9frxBvjeA?feature=share

Exit mobile version