நடமாட்டக் கட்டுப்பாடுகள் வருமா? – சுகாதார அமைச்சின் பதில்

4 years ago
Sri Lanka
(135 views)
aivarree.com

நாட்டில் நாளாந்தம் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. 

அதேபோன்று கொவிட் மரணங்களும் அதிகரித்துள்ளன.

இது ஒரு ஆபத்தான சூழ்நிலையாக இருந்தாலும், இப்போதைக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் உயர் மட்ட அதிகாரி ஒருவர் அய்வரி செய்திகளுக்கு இதனைத் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்துவதற்காகச் சுகாதார அமைச்சரின் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.