Aivarree

தேயிலை விலையில் வீழ்ச்சி

கடந்த வாரத்தில் 6.6 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏலத்தில் விடப்பட்டதோடு தேயிலை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தேயிலையின் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் ஜனவரி மாதத்தின் இறுதி இரண்டு வாரங்களில் இவ்வாறு தேயிலை விலை குறைவடைந்துள்ளது.

உயர்தரமான பெஸ்ட்-வெஸ்டர்ன் தேயிலையின் விலை உயர்வாகவே இருந்ததுடன், தரம் குறைந்த ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை இருபது முதல் முப்பது ரூபாய் வரை குறைந்துள்ளது.

2.7 மில்லியன் கிலோகிராம் கீழை நாட்டு தேயிலை ஏலத்திற்கு விடப்பட்டுள்ளதோடு அதன் விலையும் கிலோவுக்கு சுமார் 30 ரூபா வரையில் குறைந்துள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version