Aivarree

தமிழ் MPகள் பாராளுமன்றில் போராட்டம்

எதிரணிகளின் தமிழ் MPகள் (பாராளுமன்ற உறுப்பினர்கள்) வியாழக்கிழமை பிற்பகல் பாராளுமன்றில் அமர்வின்போது எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற காணி அபகரிப்புக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெற்றது.

வனவள திணைக்களத்தின் ஊடாக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதை நிறுத்துமாறு கோரி பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் கோஷம் எழுப்பினர்.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும் அவர்கள் வியாழக்கிழமை காலை போராட்டத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version