தமிழ் பாடசாலை அதிபரை மண்டியிட செய்த குற்றச்சாட்டில் இருந்து விடுதலையான MP

4 years ago
Sri Lanka
(101 views)
aivarree.com

தமிழ் பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிட செய்த குற்றச்சாட்டில் இருந்து ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் (தற்போதைய MP) சாமர சம்பத் தசநாயக்க விடுவிக்கப்பட்டார்.

பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி பவானி ரகுநாதன் செய்த முறைப்பாட்டுக்கமைய இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பதுளை நீதவானின் உத்தரவின்படி, பதுளை மத்தியஸ்த சபையில் இரு தரப்புக்கும் இணக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில் சாமர சம்பத் தசநாயக்கவை வழக்கில் இருந்து நீதவான் விடுவித்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, திருமதி பவானி ரகுநாதன் முன்னிலையாகவில்லை.

பதுளை நிரூபர் பாலித ஆரியவன்ச