டிஜிட்டல் அடையாள அட்டை /இந்தியா நிதியுதவி

4 years ago
Sri Lanka
(38 views)
aivarree.com

நாட்டில் அமுல்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்திற்கு இந்திய நிதியுதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பயோமெட்ரிக் தரவுகளின் அடிப்படையில் நபர்களின் அடையாளங்களை சரிபார்ப்பது இதன் நோக்கமாகும்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த திட்டத்திற்கு நிதி வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

Reported by
Editorial Reporter