ஜம்மு – காஷ்மீரில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகரின் – ரங்போரா – சகுரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் தேடுதல் குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
