பாட்டலி சம்பிக்க ரணவக்க அண்மையில் 43ஆம் படையணி என்ற பெயரில் தமதுபிரச்சார நடவடிக்கையை ஆரம்பித்தார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக ஜனாதிபதிவேட்பாளராக களமிறங்குவது இந்த நடவடிக்கையின் திட்டம் என நம்பப்படுகிறது.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தாமே என்பதை அதன்தலைவர் சஜித் பிரேமதாச திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறார்.
அடுத்த தடவை ராஜபக்ச தரப்பில் இருந்து யார் ஜனாதிபதி வேட்பாளராககளமிறக்கப்பட்டாலும், அவரைத் தோற்கடித்து தாமே ஜனாதிபதியாகி ஆட்சியைகைப்பற்றுவேன் என அவர் சூளுரைத்து இருக்கிறார்.
இந்த விடயத்தில் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தரப்புக்கும் சஜித் தரப்புக்கும்இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.
