Aivarree

ஜனாதிபதி – மைத்திரி சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று திங்கள் (08) பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரித்துள்ள யோசனை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 15 அம்ச தீர்வுக் திட்டம் ஒன்றை அண்மையில் சமர்பித்திருந்தது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடலொன்று சனிக்கிழமை (05) இரவு பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ்ஸின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமை மற்றும் கலந்துரையாடலுக்கு வருமாறு ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version