tamilnewsline

ஜனவரி மாதத்தில் மாத்திரம் 1,875 விபத்துக்கள்

நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 1,875 பாரதூரமான வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவற்றில் 235 உயிரிழப்புகள் சம்பவித்துள்ளமை காவல்துறை பதிவுகளில் உறுதியாகியுள்ளது.

கடந்த மாதத்தில் முச்சக்கரவண்டி விபத்துக்களில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜனவரி மாதத்தில் நாளொன்றில் சராசரியாக 8 பேர் விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 2021ஆம் ஆண்டில் பதிவான மொத்த வீதி விபத்துகளின் எண்ணிக்கை 22,319 ஆகும்.

Exit mobile version