Aivarree

சைவ கோவிலில் பிரித் ஓத முனைப்பு | ஆலய நிர்வாகம் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் – சுழிபுரம் – பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலைகளை வைத்து பிரித் ஓதுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாதென ஆலய தர்மகத்தா சபையும் ஆலய பக்தர்களும் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளனர்.

ஈழத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பறாளாய் முருகன் ஆலயமும் ஒன்றாகும்.

ஆலய வளாகத்தில் உயரமான அரச மரம் உள்ளது.

குறித்த அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருவதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் புதன்கிழமை ஆலய வளாகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்று, அதற்கு அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

Exit mobile version