Aivarree

செவ்வாய்க்கிழமை மின்சார தடை எப்படி?

மின் உற்பத்திக்கான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை (8) E மற்றும் F பிரிவுகளில் ஏழரை மணி நேரமும், ஏனைய எட்டு பிரிவுகளில் மூன்று மணிநேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.

E மற்றும் F பிரிவுகளில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி 30 நிமிடங்களும் மின் தடை அமுலாகும்.

மற்ற பிரிவுகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2 மணி நேரம் மின்தடை ஏற்படும்.

அங்கு மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒரு மணித்தியாலம் மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version