Aivarree

IMF செல்வாரா பசில் – லண்டன் ஊடகத்துக்கு செவ்வி

File_Photo

சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லண்டன் – பைனான்சியல் டைம்;ஸ் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையை கடன்நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த முயற்சிக்கப்படுகிறது.

இதற்காக இலங்கையின் பிணைய பங்காளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்புடனும் கலந்துரையாடப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு புறம்பான கருத்தை வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் தற்போதைய சூழலில் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என்று தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார்.

Exit mobile version