சென்னையில் ஐபிஎல் (IPL) போட்டிகள் இல்லை!?

4 years ago
SPORTS
(76 views)
aivarree.com

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 27 முதல் மே மாதம் 28 வரையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டிகள் நடைபெற உள்ள ஐந்து இடங்களை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி மும்பையில் 3 மைதானங்களிலும் அகமதாபாத் மற்றும் பூனேயிலும் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.

70 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் எந்த போட்டியும் மஹாராஷ்டிராவுக்கு வெளியில் நடத்தப்பட மாட்டாது என நம்பப்படுகிறது.

இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது.

#sportstar