Aivarree

சுற்றுலாத்துறை அபிவிருத்தி / பதிவு கட்டணம் இரத்து

கொவிட் பரவல் காரணமாக 2019ம் ஆண்டு முதல் இலங்கையின் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டிருந்தது.

தற்போது அது மீளெழ ஆரம்பித்துள்ள நிலையில், சுற்றுலா விடுதிகள், வழிகாட்டிகள் உள்ளிட்ட துறை சார்ந்தோரது வருடாந்த பதிவு கட்டணத்தை நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

மேலும் சுற்றுலா விடுதிகள், வழிகாட்டிகள், சேவை வழங்குநர்கள் போன்றவற்றின் பதிவுகளைத் துரிதப்படுத்தச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.

2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது சுற்றுலாத்துறை விடுதிகள் மற்றும் சேவை வழங்குநர்கள் முறையே 39 மற்றும் 26 சதவீதங்களால் அதிகரித்துள்ளது.

இந்த மாதத்தின் முதல் ஒரு வார காலப்பகுதியில் மட்டும் 22,412 பேர் சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்குப் பிரவேசித்துள்ளனர்.

Exit mobile version