இரண்டாவது 20/20 போட்டியில் இலங்கையை சுப்பர் ஓவரில் அவுஸ்திரேலியா வீழ்த்தியது.
அவுஸ்திரேலிய அணி முதலில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.
165 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாடிய இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 19 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இலங்கை அணி 18 ஓட்டங்களை எடுத்தது.
அதன்படி போட்டி சமநிலைக்கு செல்ல சூப்பர் ஓவரில், இலங்கை பெற்ற 5 ஓட்டங்களை அவுஸ்திரேலிய 3 பந்துகளில் கடந்து வெற்றியை தமதாக்கியது.
