Aivarree

சுகாதார தரப்பினர் மீண்டும் போராட்டம்

புதன்கிழமை முதல் இரண்டு நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவிதுள்ளது.

வேதனம் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காததால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த மாதம் 9 நாட்களுக்கு தாதியர் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்த போது, சுகாதார அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாட்டின்படி, தொழிற்சங்க நடவடிக்கையை அவர்கள் இடைநிறுத்தியிருந்தனர்.

எனினும் இந்த பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்ட விடயங்கள், இதுவரையில் நிறைவேற்றப்படாமல் உள்ளதால், புதன்கிழமை முதல் இரண்டு நாட்களுக்கு, போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சிறுவர் மற்றும் மகளிர் வைத்தியசாலைகள், புற்றுநோய், மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகள் என்பவற்றில் தொடர்ந்தும் சேவைகள் தங்குதடை இன்றி முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Exit mobile version