Aivarree

சிறைக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரஞ்சனின் ஆதரவாளர்கள்

ரஞ்சன் ராமநாயக்கவின் ஆதரவாளர்கள் நேற்று (04) வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஆனால் அவர் விடுவிக்கப்பட மாட்டார் என்ற தகவல் கிடைத்தவுடன் அதிருப்தி அடைந்த அவரது ஆதரவாளர்கள் வெலிக்கடை சிறைக்கு முன்னால் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு வருட கால கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்துவருகிறார்.

Exit mobile version