Aivarree

சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள சிக்கன தீர்மானங்கள்

டொலர் தட்டுப்பாடு காரணமாக மின்சாரம் மற்றும் எரிபொருள் பாவனையை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி,

1. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மேலதிக எரிபொருள் விநியோகம் இல்லை.

2. கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக வெளிமாகாண அதிகாரிகளை கொழும்பில் உள்ள தலைமை அலுவலகங்களுக்கு வரவழைப்பதை மட்டுப்படுத்தல்.

3. முடிந்தவரை சூம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவாதங்கள் மற்றும் சந்திப்புகளை நடத்தல்.

4. அத்தியாவசிய கடமைகளுக்காக வெளிமாவட்ட உத்தியோகத்தர்கள் கொழும்புக்கு வர வேண்டுமாயின் ஒரே வாகனத்தில் குழுவொன்றை வரவழைத்தல்.

5. கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை வாகன நெரிசல் இல்லாத நேரங்களில் நடத்தல்.

6. அஞ்சல் சேவைகளுக்கு கார்கள், வேன்கள் என்பவற்றுக்கு பதிலாக, மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்தல்.

7. சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியமான பொதுச் சேவைகளுக்காக, தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புப் பேணப்படல் – பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச காவல்துறை மேற்பார்வையின் கீழ் அவற்றை வழங்கல்.

8. அரச நிறுவனங்களில் பிற்பகல் 2:30 முதல் 4.30 வரை இரண்டு மணி நேரம் குளிரூட்டிகளை அணைத்தல் – முடிந்தவரை குளிரூட்டிகளுக்கு பதிலாக மின்விசிறிகளைப் பயன்படுத்தல்.

9. திட்டமிடப்பட்ட அலுவலக நேரத்திற்குப் பிறகு அலுவலகங்களை மூடுதலும், வார இறுதி நாட்களில் அவசர சந்தர்ப்பங்களில் மட்டும் திறத்தலும்.

10. லிஃப்ட் பயன்பாட்டைக் குறைத்து முடிந்தவரை படிக்கட்டுகளைப் பயன்படுத்தலும், தேவையற்ற விளக்குகளை அணைத்தலும்.

11. உயர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வலயங்களில் உள்ள சாலைகள் தவிர அனைத்து சாலைகளிலும் மின்விளக்குகளை தற்காலிகமாக அணைத்தல்.

Exit mobile version