Aivarree

சவுதி விமான நிலையத்தில் தாக்குதல்/ இலங்கையர் காயம்

ஈரான் பின்புலத்தில் செயற்படுகின்ற ஹவுத்தி பயங்கரவாதிகள் சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆளில்லா விமானம் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் இலங்கையர் ஒருவரும் இந்தியர் ஒருவரும், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த சிலரும் உள்ளடங்குவதாக அரப் நியூஸ் தெரிவித்துள்ளது.

யேமனில் மீண்டும் ஆட்சியை நிலை நிறுத்தும் வகையில் சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஹவுதி தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வரும் பின்னணியில் அபா விமான நிலையம் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் விமான நிலையத்துக்கு சிறியளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பல்வேறு தரப்பும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version