tamilnewsline

சகல பாடசாலைகளும் மீளத் திறப்பு


நாட்டின் சகல பாடசாலைகளும் திங்கட் கிழமை முதல் மீளத் திறக்கப்படுகின்றன.


20 பேருக்குக் குறைந்த எண்ணிக்கைக் கொண்ட வகுப்புகளின் அனைத்து மாணவர்களும் ஒருசேர அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் 20க்கு மேற்பட்ட மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட வகுப்புகள் எண்ணிக்கை அடிப்படையில் 20 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு வாரம் என்ற ரீதியில் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


கடந்த கால கொவிட் நிலைமைகளைக் கவனத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


அதேநேரம் பாடசாலைகளின் கல்வி சார் மற்றும் கல்வி சாரா அனைத்து பணியாளர்களும் பாடசாலைகளுக்கு வழமை போல் சமூகமளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Exit mobile version