Aivarree

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான போலி நேர அட்டவணை / பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான (GCE A/L) போலியான நேர அட்டவணை ஒன்று இணையத்தில் இந்த நாட்களில் பகிரப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை தினமும் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும்.

வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மதியம் 1.30 க்கு தேர்வு ஆரம்பமாகும்.

ஆனால் இதற்குப் புறம்பான போலி கால அட்டவணை ஒன்று வெளியாக்கப்பட்டுவருவதாக அதனைக் கவனத்தில் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version