தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கொவிட் நோயாளர்கள் பலரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
கொவிட் தடுப்பூசிகளை முறையாகப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர் ஹர்ஷ சதீஸ்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 325 கொவிட் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 75 வீதமானோர் பிராணவாயுவை (ஒக்சிஜன்) நம்பியுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
