Aivarree

கொழும்பு பங்கு சந்தையில் புதிய நடைமுறை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் கணிக்கப்படுகின்ற முறைமையில் இன்று (24) முதல் புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்படவுள்ளது.


முன்னர் முழு சந்தை மூலதனமாக்கல் முறைமையின் கீழ் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் கணிக்கப்பட்டது.


இன்று முதல் அது பொது மிதப்பு அடிப்படையிலான சந்தை மூலதனமாக்கல் மூலம் கணிக்கப்படும். 


அனைத்து பங்கு விலைச் சுட்டெண் கடந்த வெள்ளிக்கிழமை வரையில் இந்த ஆண்டில் 9.37 சதவீதம் அதிகரித்ததுடன், கடந்த ஆண்டு 80.5 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. 


எக்ஸ்போ லங்கா, லங்கா ஒரிக்ஸ் லீசிங், ப்ரௌவ்ன்ஸ் இன்வெஸ்ட்மென்ட், ஜேகேஎச் என்பன சந்தை மூலதனமாக்கல் அடிப்படையில் முதல் நான்கு இடத்தைப் பெற்றுள்ளன.

Exit mobile version