கூட்டு ஒப்பந்த வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

5 years ago
tamilnewsline.com

பெருந்தொட்டத் தொழிலாளர்களது 1000/- வேதனம் தொடர்பான கூட்டு ஒப்பந்த வழக்கு இன்று மேன் முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றுப் பொறிமுறை ஒன்றுடன் கூட்டு ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டால், அதற்கு செல்ல தயார் என தொழிற்சங்கங்கள் சார்பில் மன்றுரைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களிடன் கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ் MP, தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளுக்கு அமைய, 1000/- வேதனம் போதாது என்றார்.