Aivarree

குறைந்த பட்ச பேருந்து கட்டணம் 20 ரூபா

File Photo

எரிபொருள் விலை ஏற்றத்தை அடுத்து, பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.


இதுதொடர்பாக ஞாயிற்றுக் கிழமை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.


இதன்போது குறைந்த பட்ச பேருந்து கட்டணம் 2 அல்லது 3 ரூபாவினால் அதிகரித்து, 19 அல்லது 20 ரூபாவாக நிர்ணயிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்த யோசனை திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு முடிவு செய்யப்படும். 

Exit mobile version